எம்பொண்டாட்டி உன் கூட இந்த சிரிச்சி பேசுறா?.. நடந்த பயங்கர கொலை.! பரபரப்பு சம்பவம்.!!



Karnataka Mysore Man Murder due to He Doubt His Wife Affair with Them

மனைவி சிரித்து பேசும் நபருடன் கள்ளக்காதல் வைத்திருப்பதாக எண்ணி பிரச்சனை செய்த கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டம், உன்சூர் தாலுகா பி.பி.சி காலனி பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணன் (வயது 35). இவரது மனைவி மல்லிகா. அப்பகுதியை சார்ந்தவர் கோபால். கிருஷ்ணாவின் மனைவி மல்லிகா, கோபாலிடம் சிரித்து பேசி வந்துள்ளார். இதனால் கோபால் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த கிருஷ்ணன், கோபாலிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். 

கடந்த 27 ஆம் தேதியும் கிருஷ்ணன் கோபாலிடம் தகராறு செய்த நிலையில், கிருஷ்ணா இதே தினத்தில் திடீரென்று மாயமாகியுள்ளார். 2 நாட்களாக ஆகியும் கிருஷ்ணன் வீட்டிற்கு வரவில்லை என்பதால், அதிர்ச்சியடைந்த கிருஷ்ணாவின் மனைவி மல்லிகா, உன்சூர் புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில், கோபாலுக்கும் - கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறுக்கு பின்னர் அவர் மாயமாகியிருக்கிறார் என்பதால், கோபாலின் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

karnataka

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கோபாலை பிடித்து விசாரணை செய்கையில், அவர் முதலில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். காவல் அதிகாரிகள் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், கொலை சம்பவம் அம்பலமானது. கிருஷ்ணாவின் மனைவியுடன் கோபால் கள்ளத்தொடர்பில் இருப்பதாக கிருஷ்ணன் சந்தேகித்து இருக்கிறார். இதுகுறித்து இருவரிடையே அவ்வப்போது தகராறு நடைபெற்று வந்துள்ளது. 

சம்பவத்தன்றும் இருவரிடையே தகராறு நடந்து வந்த நிலையில், ஆத்திரமடைந்த கோபால் நண்பன் அசோக்குடன் சேர்ந்து கிருஷ்ணாவை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், கிருஷ்ணனின் உடலை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு எடுத்து சென்று குழிதோண்டி புதைத்துள்ளனர். கோபாலை கைது செய்த அதிகாரிகள், அவரது வாக்குமூலத்தின் பேரில் அஷோக்கையும் கைது செய்தனர்.

karnataka

இருவரிடமும் கிருஷ்ணனின் உடலை புதைத்த இடம் குறித்து விசாரணை செய்து, கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.ஆர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருவரின் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், மல்லிகாவுக்கு தொடர்பு உள்ளதா? அல்லது கிருஷ்ணனின் சந்தேக பார்வை தகராறால் கொலை நடந்ததா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.