மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்டாப் ரூமில் மாணவிக்கு முத்தம் கொடுத்த எச்.எம்... வீடியோ வெளியானதால் பேரதிர்ச்சி.!
பள்ளி வளாகத்தில் உள்ள ஆசிரியர் அறையில் மாணவிக்கு தலைமை ஆசிரியர் முத்தம் கொடுத்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தில், எச்.டி கோட் தாலுகாவில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளியின் மாணவர்கள் தலைமை ஆசிரியரின் தரம்கெட்ட செயலை வெளிப்படுத்தும் பொருட்டு, தலைமை ஆசிரியர் மாணவிக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு இருப்பதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்.
இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவே, காவல் துறையினர் தாமாக முன்வந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமை ஆசிரியரை கைது செய்தனர்.
வீடியோ வெளியானதும் மாவட்ட கல்வித்துறையும் தலைமை ஆசிரியரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. பள்ளியில் படிக்க வந்த சிறுமியை ஏமாற்றி, தனது இச்சைக்கு உபயோகம் செய்த தலைமை ஆசிரியரின் அதிர்ச்சி செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.