மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சொந்த தந்தையே 4 வருடமாக மகளை சீரழித்த கொடூரம்..! திருமண வாழ்க்கைக்கும் இடையூறு.. அடித்து நொறுக்கிய மனைவியின் சொந்தங்கள்.!
45 வயதாகும் தந்தை தனது சொந்த மகளை சீரழித்து, அவரின் திருமண வாழ்க்கைக்கும் இடையூறாக இருந்துள்ளார். தகவல் அறிந்து வந்த தாய்வழி சொந்தம், கயவனை அடித்து நொறுக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்து சென்றபின் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டம், கோவிந்தபுரா கிராமத்தில் வசித்து வருபவர் கோணப்பா (வயது 45). இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவரின் சொந்த ஊர் ஹாவேரி மாவட்டம் ஆகும். பிழைப்புக்காக சிவமொக்கா வந்து குடும்பத்துடன் தங்கி இருந்துள்ளார்.
45 வயதாகும் கோணப்பாவிற்கு மகளின் மீதே மோகம் ஏற்பட்ட நிலையில், மனைவி இல்லாத நேரத்தில் வீட்டில் மகளை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என்றும் சொந்த மகளை மிரட்டி இருக்கிறார்.
இதனால் பயந்துபோன கோணப்பாவின் மகளான இளம்பெண்ணும் கொடுமையை வெளியே கூறாமல் இருக்க, கணவனின் அதிர்ச்சி செயல் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து கணவரை கண்டிக்கவே, அவர் அதனை கண்டுகொள்ளாமல் மகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
கடந்த 4 வருடமாக தந்தையால் கொடூரத்தை அனுபவித்து வந்த இளம்பெண்ணின் துயரை போக்க, தாய் மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், சொந்த மகளின் திருமணத்திற்கு காமுக தந்தை கோணப்பாவே தடையாக இருந்து வந்துள்ளார்.
மகளின் வாழ்க்கையை மீட்க என்ன செய்யலாம் என்பது தெரியாமல் தவித்த மனைவி, தனது குடும்பத்தினருக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார். ஆவேசத்துடன் வந்த அவரின் குடும்பத்தினர், கோணப்பாவை சரமாரியாக அடித்து நொறுக்கி, சிவமொக்கா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவரை ஒப்படைத்தனர்.
புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் கோணப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அரசு காப்பகத்தில் இணைத்தனர்.