மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கர்நாடகாவில் பதற்றம்...! பஜ்ரங் தள் நிர்வாகி படுகொலை - சிவமொக்காவில் 144 தடை உத்தரவு அமல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா நகரை சேர்ந்தவர் ஹர்ஷா (வயது 26). இவர் இந்து அமைப்பான பஜ்ரங் தள ஆதரவாளர் மற்றும் நிர்வாகி ஆவார். இவர் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
இதனால் அங்குள்ள சீகேஹட்டி பகுதியில் பல்வேறு வாகனத்திற்கு தீ வைக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். மேலும், பதற்றமான சூழல் ஏற்பட்டதால், சிவமொக்கா மாவட்டத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.
சர்ச்சைக்குரிய இடங்களில் 144 தடையாணை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கி இருப்பதால், காவல் துறையினர் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் தொடர்பான சர்ச்சை நடந்து, தற்போது லேசான அமைதி திரும்பியது போல இருந்தது. இந்த நிலையில், இந்து அமைப்பின் ஆதரவாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.