மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மூக்கு முட்ட சாப்பிட்டு, ஓசி சோறு கேட்டு தகராறு.. கொதிக்கும் எண்ணெயை தொழிலாளி மீது ஊற்றி அட்டகாசம்.!
மதுபோதையில் மூக்கு முட்ட சாப்பிட குடிகார கும்பல், சாப்பிட்ட பொருளுக்கு பணம் கொடுக்காமல் தொழிலாளி மீது சூடான எண்ணெயை ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா, பத்ராவதி நகரில் வசித்து வருபவர் லோகேஷ் குமார். இவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் சமையல்காரராக பணியாற்றுபவர் மனோஜ் குமார். நேற்று இரவில் லோகேஷின் உணவகம் அருகேயுள்ள மதுபானக்கடைக்கு வந்த 5 பேர் கும்பல், மதுபானம் அருந்திவிட்டு சாப்பிட வந்துள்ளது.
மதுபோதையில் இருந்தவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை வாங்கி சாப்பிட்ட நிலையில், சாப்பிட்டு முடித்ததும் பணம் கொடுக்காமல் செல்ல முயற்சித்துள்ளது. இதனைகவனித்த உரிமையாளர் சாப்பாடுக்கு பணம் கேட்கவே, தங்களால் பணம் கொடுக்க இயலாது என கும்பல் மிரட்டியுள்ளது.
இதனால் உணவகத்தின் உரிமையாளர் - குடிகார கும்பல் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் லோகேஷை தாக்கியுள்ளது. இதனை தடுக்க முயற்சித்த மனோஜின் மீது, கொதிக்கும் எண்ணெயை ஊற்றி இருக்கிறது. இதனால் அவரின் முகம், கண் மற்றும் நெஞ்சு பகுதிகள் தீக்காயம் அடைந்துள்ளது.
இதனைகவனித்த பொதுமக்கள் மனோஜை மீட்டு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மேலும், 5 பேர் கும்பல் தப்பி சென்ற நிலையில், சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உணவக உரிமையாளர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.