மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேரதிர்ச்சி.. கொரோனாவுக்கு மத்தியில், குரங்கு காய்ச்சலால் பெண் பாதிப்பு.. பெரும் அச்சத்தில் மக்கள்.!
இறந்த குரங்கின் உண்ணியில் இருந்து பரவும் நோய்வாய்ப்பட்ட பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தீர்த்தஹள்ளி, குடிகே கிராமத்தை சார்ந்த 57 வயது பெண்மணி கடந்த சில நாட்களாக காய்ச்சல் அறிகுறியுடன் இருந்து வந்துள்ளார். இவர் வீட்டிலேயே மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் சரியாகாத நிலையில், சிவமொக்கா மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் இரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்த நிலையில், அவருக்கு KFD எனப்படும் கியாசனூர் காடு நோய்தொற்று (Kyasanur Forest Disease) உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Kyasanur Forest Disease என்பது கடந்த குரங்கில் இருந்து மனிதருக்கு பரவக்கூடிய காய்ச்சல் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு கடந்த 2 வருடங்களுக்கு பின்னர் கர்நாடகாவில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1957 ஆம் வருடம் கர்நாடக மாநிலத்தில் உள்ள மலைக்கிராமங்களில் இவ்வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டு, அதுவே கியாசனூர் காடு வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இவ்வகை வைரஸ் பரவ இறந்த குரங்குகளின் உடலில் இருக்கும் உண்ணிகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளை கடிப்பதால், அதில் உள்ள பாக்டீரியா வைரஸை பரப்பி குரங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது.