மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலிக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம்.. வாலிபர் எடுத்த விபரீத முடிவால் சோகம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டம், ஓசநகர் ரிப்பன்பேட்டை ஆலுகுட்டே கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவரின் மகன் அவினாஷ் (வயது 27). இதே பகுதியில் வசித்து வந்த இளம்பெண்ணும், அவினாஷும் கடந்த சில வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவரவே, பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேறொரு வரன் பறிக்கப்பட்டுள்ளது. மேலும், நிச்சயதார்த்தமும் அவசரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவினாஷ் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த பிப். 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று அவினாஷ் தோட்டத்தில் உள்ள மோட்டார் அறைக்கு சென்று தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ரிப்பன்பேட்டை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து நேரில் பார்வையிட்டனர்.
பின்னர், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.