திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்: அமைச்சர் மாவட்டத்திலேயே இப்படியா?.. வைரலாகும் வீடியோ.!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமுக்கா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் மாணவர்களை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் நடந்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் மது பங்கனரப்பா இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனால் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வைத்து போராடி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் கழிவறைகளை மாணவர்களை சுத்தம் செய்ய வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த சம்பவம் நடந்துள்ளது.