திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உணவு சமைப்பதில் தகராறு.. அண்ணனை சரமாரியாக குத்தி கொலை செய்த தம்பி.. பயங்கர சம்பவம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே, நீட்டுவள்ளியில் வசித்து வருபவர் சவுகத் அலி (வயது 27). இவரின் சகோதரர் ஜமீர் பாஷா (வயது 22). இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவர்கள் அனைவரும் டாங்கே பார்க் பகுதியில் தாயுடன் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று தாய் சகோதரர்களிடம் சமைத்து சாப்பிடும்படி கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இருவரும் சமைக்க தொடங்கிய நிலையில், அடுப்பில் சமையலை யார் கவனிப்பது என சண்டை கிளம்பியுள்ளது. இதில், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவததால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ஜமீர் பாஷா, வீட்டில் இருந்த கத்தியால் அண்ணன் சவுகத் அலியை கொலை செய்துள்ளார். கொலை செய்த பயத்தில் ஜமீர் பாஷா அங்கிருந்து தப்பி செல்லவே, இந்த கொலை சம்பவம் ஜெ.டி.கே நகர் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சவுகத் அலியின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜமீர் பாஷாவை தேடி வருகின்றனர்.