ஆற்றில் குளிக்க சென்ற 3 கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்.. மழை காலங்களில் இப்படி செய்யாதீங்க..!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம், ஹெப்ரி தாலுகா சிவபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள ஆறு பத்ரடி. இந்த ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
அங்குள்ள பண்ணை பகுதியை சார்ந்த சுதர்சன் (வயது 16), கருவூலம் பகுதியை சார்ந்த கிரண் (வயது 16), ஹர்யாட்கா அஞ்சரை பகுதியை சார்ந்த சோனித் (வயது 17) இவர்கள் மூவரும் நண்பர்கள்.
சம்பவத்தன்று, இவர்கள் 3 பெரும் பத்ரடி ஆற்றில் குளிக்க சென்ற நிலையில், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர்கள், மாணவர்களை ஆற்றில் தேடியுள்ளனர்.
அவர்களின் ஆடைகள் மட்டும் கரையில் இருந்த நிலையில், மாணவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கரையோரம் நடத்திய சோதனையில், மாணவர்களின் உடல்கள் அங்குள்ள லைம்லைட் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.