மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுவால் மதியிழந்து மகன் கொடூர செயல்; தாயை துள்ளதுடிக்க அடித்தே கொலை செய்த பயங்கரம்..!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி, குந்தாபுரா ஹலாடி கிராமத்தில் வசித்து வருபவர் பார்வதி. இவரின் மகன் கிருஷ்ணா நாயக். மகள் ஸ்ரீமதி. மதுபோதைக்கு அடிமையாகி இருந்த கிருஷ்ணா நாயக், தினமும் போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 18 ம் தேதியும் கிருஷ்ணா நாயக் மதுபோதையில் வீட்டிற்க்கு வந்த நிலையில், தாய் பார்வதி மகனை கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா நாயக் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயை மீட்ட மகள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பார்வதி மங்களூரு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பார்வதி பரிதாபமாக உயிரிழக்கவே, இதுகுறித்து வழக்குப்பதிந்து காவல் துறையினர் கிருஷ்ணா நாயக்கை தேடி வருகிறார்கள்.