ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்ட மாணவி தலையை வெட்டுவோம்.! கொலை மிரட்டலால் நிலைகுலைந்த மாணவியின் குடும்பம்.!



 Kashmiri student threatened

காஷ்மீரை சேர்ந்தவர் அரூசா பர்வேஸ். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். காஷ்மீரில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 8-ஆம் தேதி வெளியானது. இதில் அரூசா பர்வேஸ் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருந்தார்.

இதையடுத்து அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த புகைப்படத்தில் அவர் ஹிஜாப் அணியவில்லை. அவர் ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்டதற்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
 
இது தொடர்பாக ஒருவர் வெளியிட்ட பதிவில், “கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள், சிறுமிகள் ஹிஜாப்புக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் காஷ்மீரில் நமது சகோதரி முகத்தை ஹிஜாப் கொண்டு மறைக்காமல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை நாம் அனுமதிக்க முடியாது.

அடுத்த முறை அவர் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டால் அவரது தலையை வெட்டுவோம் என்று கூறியுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அரூசா பர்வேஸ் கூறுகையில், ஹிஜாப் அணிவது அல்லது அணியாதது ஒருவரின் மதத்தின் மீதான நம்பிக்கையை வரையறுக்காது. அவர்கள் செய்யும் விமர்சனங்களை விட அல்லாவை நான் அதிகம் நேசிக்கிறேன். இந்த கொலை மிரட்டல் பதிவு என் குடும்பத்தை நிலைகுலைய செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.