திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பவர்கட்டால் பரிதாபம்... மெழுகு வெளிச்சத்தில் படிக்க ஆசைப்பட்ட சிறுமி தீக்கிரையாகி பலி..!
மின்சாரம் இல்லாததால், மெழுகுவர்த்தி ஏற்றி படிக்க முயன்ற சிறுமியின் உடலில் தீப்பற்றி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகாமையில் சாஸ்தாம்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் லீனா. இவர் ரயில்வே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் அர்ச்சனா (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்தநிலையில், லீனாவுக்கு நேற்று இரவு பணி என்பதால்அவர் வேலைக்கு சென்ற போது, வீட்டில் அர்ச்சனா மட்டும் இருந்துள்ளார். அப்போது இரவு 8 மணியளவில் அந்த பகுதி முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டதால், படிப்பதற்காக மெழுகுவர்த்தியை ஏற்றியுள்ளார்.
இதில் அர்ச்சனாவின் கையில் இருந்த மெழுகுவர்த்தி தவறி, அவர் மீது விழுந்த நிலையில், ஆடையில் தீப்பற்றியுள்ளது. அத்துடன் சிறுமி விரைவில் தீப்பற்றிக் கொள்ளும் வகையில் ஆடை அணிந்திருந்தால், மளமளவென உடல் முழுவதும் தீ பற்றி எரியத்தொடங்கியுள்ளது.
இதனையடுத்து வலியால் சிறுமி அலறித்துடிக்க, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை உடனடியாக மீட்டு சாஸ்தாம்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின் இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிய வர, சாஸ்தாம்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.