"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
"14 வயசுல என்ன லவ்வு?.. விஷம் குடிச்சிட்டு சாவு": மகளை கடுமையாக துன்புறுத்திய தந்தை.. அதிர்ச்சி செயல்.!
கேரளா மாநிலத்தில் உள்ள ஆலுவா மேற்கு பகுதியில் 14 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில், தன்னுடன் பயிலும் 16 வயது மாணவரை காதலித்து வந்ததாக தெரியவருகிறது.
பருவ வயதில் ஏற்படும் ஈர்ப்பை காதலாக பாவித்த ஜோடி, போனில் நெடுநேரம் உரையாடி வந்துள்ளது. இதனை சிறுமியின் தந்தை கவனித்து இருக்கிறார்.
ஒருகட்டத்தில் அவருக்கு விஷயம் தெரியவரவே, மகளை கண்டித்தும் பலனில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது மகளை விஷம் குடிக்க வற்புறுத்தி வாயில் விஷம் ஊற்றி இருக்கிறார். கடுமையாக தாக்கவும் செய்துள்ளார்.
அவரின் பிடியில் இருந்து சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.