மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாற்றம் முன்னேற்றத்தில் கேரளா.. உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை.!
கேரளாவில் உள்ள கொச்சி பல்கலைக்கழகத்தில், உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து, மாதவிடாய் நாட்கள் விடுமுறையை கணக்கில் எடுத்துக்கொண்ட மாநில அரசு, மாநிலத்தில் உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் இருக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் இவ்வுத்தரவு பொருந்தும். மேலும், 18 வயது பூர்த்தியான மாணவிகள், திருமணம் முடித்துவிட்டு படிப்பை தொடர்ந்தால் 60 நாட்கள் பிரசவகால விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.