"இந்த மாதிரி ஆபாசப்படம் பார்த்தா தப்பில்ல" நீதிமன்றம் அதிரடி.! 



kerala highcourt said that porn videos watches are private

கடந்த 2016 ஆம் ஆண்டில் 33 வயது நபர் ஒருவர் சாலையோரத்தில் ஆபாச படம் பார்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபற்றி விசாரித்து வந்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் பி வி குன்ஹி கிருஷ்ணன், "ஆபாச படம் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் கூட அதை பார்க்கக் கூடியதாக மாறி இருக்கிறது. "என்று தெரிவித்துள்ளார். 

KERALA

தொடர்ந்து பேசிய அவர், "அந்தரங்கமாக ஒரு நபர் ஆபாச படத்தை பார்ப்பது குற்றமில்லை என்று கருதுகிறேன். அது தனிப்பட்ட உரிமை. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் ஆபாச வீடியோ, புகைப்படங்களை காட்சிப்படுத்தவோ, பரப்பவோ முயற்சித்தால் அது குற்றம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பது தெரிய வருகிறது" என்று கூறி வழக்கை ரத்து செய்தார். 

KERALA

மேலும், "குழந்தைகளை மகிழ்விக்க மொபைல் போன்களை பெற்றோர்கள் கொடுக்கக் கூடாது. பெற்றோரின் முன்னிலையில் மட்டும் அவர்கள் தேவைப்பட்டால் மொபைல் ஃபோன்களை பயன்படுத்தலாம். ஆபாச வீடியோக்களை குழந்தைகள் பார்க்கத் தொடங்கினால், அது தீவிர விளைவுகளை கொடுக்கும். குழந்தைகள் ஓய்வாக இருக்கும் போது கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாட வையுங்கள் .அவர்களுடன் நேரத்தை செலவழியுங்கள். ஆரோக்கியமான இளம் தலைமுறை உருவாக இது அவசியம்." என்று தெரிவித்துள்ளார்.