மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த இளம் தம்பதி: மனசாட்சி இல்லாமல் நின்ற பெண்.!
கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியைச் சார்ந்த வாலிபருக்கும், ஆலப்புழா பகுதியில் வசித்து வரும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தைத் தொடர்ந்து இருவரும் கடந்த ஓராண்டாக லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தம்பதிகளுக்கு ஒன்றரை மாத பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று அங்குள்ள கருகப்பள்ளி பகுதியில் இருக்கும் விடுதியில் இருவரும் அறையெடுத்து தங்கி இருக்கின்றனர். திடீரென குழந்தைக்கு சுயநினைவு இல்லாமல் போய்விட்டதாக தெரியவருகிறது.
இதனையடுத்து, குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு குழந்தை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் உடலிலும் காயங்கள் இருந்துள்ளன.
இதனால் மருத்துவ குழுவினர் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இருவரும் அஸ்வதி மற்றும் ஷானிஃப் என்பது தெரியவந்தது. இவர்களுக்கு குழந்தை உயிரிழந்ததில் எவ்வித வருத்தம் இருந்ததாகவும் தெரியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.