மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொசு மருந்து குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி: பெற்றோரின் அலட்சியத்தால் நடந்த சோகம்.!
குழந்தைகளின் உயிருக்கு பாதகத்தை ஏற்படுத்தும் சிறிய பொருளையும், அவர்களுக்கு விபரம் தெரியும் வரை எட்டாத உயரத்தில் வைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம், கல்லரப்பா, பாபா நகரில் வசித்து வருபவர் அன்ஷியா. இவரின் கணவர் ரஷீத்.
தம்பதிகளுக்கு ஒன்றரை வயதுடைய ஜெசா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், நேற்று சிறுமி தனது வீட்டில் இருந்த கொசு மருந்தை எடுத்து தவறுதலாக குடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்படவே, உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். பின், மேல் சிகிச்சைக்காக மங்களூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார்.
அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது.