மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
6 சிறுமிகளுக்கு போதை ஏற்றி பலாத்கார முயற்சி.. 2 இளைஞர்கள் பகீர் செயல்.. கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி.!
காப்பகத்தில் இருந்து தப்பித்த 6 சிறுமிகளை ஏமாற்றி பெங்களூர் அழைத்து சென்ற கேரள வாலிபர்கள், சிறுமிகளுக்கு குளிர்பானத்தில் போதை பொருளை கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் பெண்கள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 26 ஆம் தேதி மாலை காப்பகத்தில் இருந்த 6 சிறுமிகள் மாயமாகியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காப்பக நிர்வாகி கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை தேடி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களும் சோதனை செய்யப்பட்டது. சி.சி.டி.வி கேமிரா பதிவுகளின்படி, சிறுமிகள் 6 பேரும் சேர்ந்து இரயில் நிலையம் சென்றது உறுதியாகவே, சிறுமிகள் அங்கிருந்து பெங்களூர் சென்றதும் அம்பலமானது.
இதனையடுத்து, பெங்களூர் மாநகர காவலர்களுக்கு கேரள காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். பெங்களூர் காவல் துறையினர் உதவியுடன் மடிவாளா பகுதியில் இருந்து ஒரு சிறுமி மீட்கப்பட்ட நிலையில், பிற 5 சிறுமிகள் அங்குள்ள விடுதியில் இருந்து மீட்கப்பட்டனர். சிறுமிகளை யார் பெங்களூர் அழைத்து சென்றனர்? என்ற விசாரணையில், கொல்லத்தை சேர்ந்த டாம் தாமஸ் (வயது 26), கொடுங்கலூர் பெபின் ராபி (வயது 26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரையும் செவ்வாயூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த அதிகாரிகள், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கோழிக்கோடு காப்பகத்தில் இருந்து தப்பித்து வந்த 6 சிறுமிகள் இரயில் நிலையத்திற்கு சென்று எங்காவது செல்லலாம் என இருந்துள்ளனர். அப்போது, சிறுமிகளை கவனித்த டாம் மற்றும் ராபி அவர்களிடம் நட்பாக பேசி இருக்கின்றனர்.
சாப்பிட உணவும் வாங்கி கொடுத்ததால், இரண்டு பேரும் நமக்கு நன்மை செய்வார்கள் என்று 6 சிறுமிகளும் நம்பிவிட, அவர்களிடம் நயவஞ்சகத்துடன் பேசி பெங்களூர் அழைத்து சென்றுள்ளனர். பெங்களூரில் சிறுமிகள் தங்க விடுதியும் ஏற்பாடு செய்து கொடுத்த நிலையில், குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து சிறுமிகளை மயக்கத்தில் வைத்துள்ளனர்.
சிறுமிகளுக்கு போதை ஏறிவிட்டதை உணர்ந்த இருவரில் ஒருவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கவே, சிறுமி அங்கிருந்து தப்பி பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தப்பி வந்த சிறுமியிடம் விசாரணை நடத்தி, பிற தோழிகளும் ஆபத்தில் இருப்பதை உணர்ந்துள்ளனர்.
மொத்தமாக 6 சிறுமிகளை மீட்ட காவல் துறையினர், சிறுமிகளை பெங்களூர் அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த 2 வாலிபர்களையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே திருமணம் முடிந்த கணவன்கள் தங்களின் மனைவிகளை மாற்றி, அதனால் ஏற்பட்ட விளைவால் பெண்கள் புகார் கொடுத்து, கேடுகெட்ட செயல் மற்றும் அது தொடர்பான குழு விவகாரம் வெளி உலகிற்கு தெரியவந்த நிலையில், சிறுமிகளை ஏமாற்றி பெங்களூர் அழைத்து சென்று போதையை ஏற்றி பலாத்காரம் செய்ய முயற்சித்த பகீர் தகவல் தெரியவந்துள்ளது.