உப்பு போதையை நக்கி கிறங்கும் இளசுகள்.. வாழ்க்கையை சீரழிக்கும் கல்லூரி மாணவர்கள்.. ஆடையில்லாமல் அலங்கோலம்.!
ஆடையில்லாமல் அலங்கோலமாய் கட்டிடத்தில் கிடந்த இளைஞர்களை விசாரித்ததில் போதைப்பொருள் விற்பனை செய்த நைஜீரிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம், கருநாகப்பள்ளி பகுதியில் 4 இளைஞர்கள் போதை கிறக்கத்தில் ஆடை கலைந்திருந்தது கூட தெரியாமல் இருந்துள்ளனர். இதனைகவனித்த காவல் துறையினர், இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, ஒருவரின் ஆடைக்குள் உப்பு போன்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இவர்கள் அனைவரும் போதையில் இருந்ததால், போதை இறங்கியதும் விசாரணை நடந்துள்ளது. விசாரணையில், கல்லூரி மாணவர்களான இவர்கள் கிராம் அளவுள்ள போதை பொருளை ரூ.2,500 கொடுத்து வாங்கியுள்ளனர்.
அவர்கள் போதைப்பொருளை உபயோகம் செய்த 15 நிமிடத்திற்கு பின்னர் என்ன நடந்தது? எவ்வ்ளவு நேரம் உறங்கினோம்? என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து, கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞரை கைது செய்த காவல் துறையினர், துப்பு துலக்கி பெங்களூர் சென்று எம்.டி.எம்.ஏ போதைப்பொருளை விற்பனை செய்த நைஜீரிய இளைஞரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த போதைப்பொருள் பார்ப்பதற்கு உப்பு போலவே இருக்கும் என்பதால் அதனை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் எளிய முறையில் கடத்திவிடும் தகவலும் கிடைத்துள்ளது. நைஜீரிய இளைஞர்களின் முக்கிய டார்கெட்டாக இருப்பது ஐ.டி பணியளர்கள், மருத்துவம் பயிலும் மாணவ - மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் உபயோகம் உயிரை கொல்லும்., உஷார்..