மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ எங்களை பிரிச்சிடுவாங்க.. கள்ளக்காதல் ஜோடி இரயில் முன் பாய்ந்து சாவு.. பீஸ் பீஸான பாடி.!
தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்த கள்ளக்காதல் ஜோடி, குடும்பத்தார்கள் தங்களை பிரித்துவிடுவார்கள் என்று எண்ணி இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு, விய்யூர் பகுதியில் வசித்து வருபவர் சிவதாசன். இவரின் மனைவி விஜி (வயது 30). சிவதாசன் கோயிலாண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் எனது மனைவியை காணவில்லை. அவரை கண்டறிந்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கோயிலாண்டி இரயில் நிலையம் அருகே காதல் ஜோடி இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது சிவதாசனின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ரானீஷ் என்பது அம்பலமானது.
அதாவது, விஜிக்கும் - அதே பகுதியில் வசித்து வந்த ரனீஷிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவருக்கும் திருமணம் முடிந்து குடும்பம் உள்ள நிலையில் கள்ளக்காதல் வயப்பட்டுள்ளனர். அவ்வப்போது, இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
கடந்த சில மாதத்திற்கு முன்னதாக முன்னதாக வீட்டை விட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடி தனியாக குடித்தனம் நடத்தி வந்த நிலையில், தங்களை பிரித்துவிடுவார்கள் என்ற பயத்தில் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகளின் விசாரணை நடந்து வருகிறது.