மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியின் ஆடையை கிழித்து கதறக்கதற கற்பழித்து நிர்வாணமாக ஓடவிட்ட காதலன்; சாலையில் அழுதுபுரண்ட பெண்..!!
தனது காதலி மற்றொரு நபருடன் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு பொஸசிவ் ஆன காதலன், உண்மை தெரியாமல் காதலியை கடத்தி கற்பழித்து சிறைக்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், கழக்கூட்டம் பகுதியில் அதிகாலை 5 மணியளவில் இளம்பெண் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என உடலில் ஆடையின்றி நிர்வாணமாக ஓடிவந்தார். அவருக்கு துணி கொடுத்தபின், சாலையில் விழுந்து அழுது புரண்டுள்ளார்.
உடனடியாக அவருக்கு அப்பகுதியை சேர்ந்த பெண்மணியின் வீட்டில் உடைவாங்கி கொடுத்து, குடிக்க தண்ணீர் கொடுத்து அமைதிப்படுத்தினர். இளம்பெண்ணிடம் அப்பகுதி மக்கள் விசாரிக்கையில், திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியில் சேர்ந்த வாலிபர் கிரண் தன்னை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்தார், எனது ஆடைகளை கிழித்து எறிந்தார், அவரிடம் இருந்து தப்பி வந்திருக்கிறேன் என குமுறியுள்ளார்.
இதனையடுத்து, அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளிர் காவல்துறை அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து பின் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த கிரண் அடுத்த சிலணிநேரத்திற்குள் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், கிரண் வேலைபார்த்துவந்த நிறுவனத்தில் பெண்மணியும் பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த நிலையில், பெண்மணி மற்றொருவருடன் பேசிக்கொண்டு இருப்பதை நேற்றுமுன்தினம் கிரண் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து தன்னுடன் வரக்கூறி அழைத்துள்ளார்.
முதலில் கிரணின் காதலி மறுப்பு தெரிவித்த நிலையில், பின் நயவஞ்சகத்துடன் காதல் மொழி பேசி சந்தேகம் வராமல் சம்மதிக்க வைத்துள்ளார். இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணை அழைத்துக்கொண்டு கழக்கூட்டம் பகுதியில் உள்ள குடோனுக்கு அழைத்து சென்றுள்ளார். குடோனில் பெண்ணை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
பின்னர் அவரின் ஆடைகளை கிழித்து எரிந்து பாலியல் பலாத்காரம் செய்து, அதனை விடியோவாக எடுத்துள்ளார். இனி வேறொரு நபருடன் பேசினால் வீடியோ சமூக வலைதளத்தில் பதிவு செய்வேன் எனவும் மிரட்டி இருக்கிறார். இரவு முழுவதும் சித்ரவதை தொடர்ந்துள்ளது.
அதிகாலை நேரத்தில் கிரண் உறங்கியதும் அங்கிருந்து தப்பிய பெண்மணி, மக்கள் உதவியுடன் காவல்துறையினரிடம் தஞ்சம் புகுந்துள்ளார். கிரண் இறுதியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.