திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ச்சீ.. சொந்த தங்கையை உறவினருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த அண்ணன்.. 5 மாத கர்ப்பிணியாக விதும்பித்தவிக்கும் 15 வயது சிறுமி.!
கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் பகுதியில் 10ம் வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுமிக்கு 21 வயதுடைய சகோதரர் இருக்கிறார். இவர்களின் உறவினருக்கு 24 வயது ஆகிறது.
இந்நிலையில், சொந்த அண்ணனே தனது உறவினருடன் சேர்ந்து தங்கையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறக்கூடாது எனவும் மிரட்டி இருக்கின்றனர்.
இவ்வாறாக சிறுமி அவரின் வீட்டிலும், உறவினரின் வீட்டிலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவர் 5 மாத கர்ப்பிணியாகி உடலநலக்குறைவை எதிர்கொண்டுள்ளார்.
மருத்துவமனையில் சிறுமியின் கர்ப்பம் உறுதியாகவே, குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவரின் சகோதரர் மற்றும் உறவினர் ஆகிய 2 பேரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.