மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
32 வயது இளைஞருடன் 15 வயது சிறுமிக்கு திருமணம்; குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளால் அம்பலமான உண்மை.!
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றதாக குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
இதன் பெயரில் அதிகாரிகள் விசாரணை நடத்துகையில், கடந்த மாதம் 28ஆம் தேதி சிறுமியின் வீட்டருகே இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது உறுதியானது.
32 வயது இளைஞருக்கு15 வயது சிறுமியை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்த நிலையில், இது தொடர்பாக காவல் துறையினரிடம் விசாரணை அறிக்கை வழங்கிய குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் இரண்டு குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.