மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரோட்டாவில் பாம்பு தோலும் பார்சல்.. பீதியை கிளப்பிய உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்.!
கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோட்டில், சிக்கன் சவர்மா சாப்பிட்ட மாணவி பலியானதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை பல அதிரடி சோதனைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பார்சல் வாங்கி வரப்பட்ட பரோட்டாவின் பாம்பு தோல் இருந்த சம்பவம் நடந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள நெடுமங்காடு, பூவத்தூர் பகுதியில் வசித்து வருபவர் பிரியா. இவர் அங்குள்ள ஓட்டலில் பரோட்டா வாங்கிவிட்டு, வீட்டிற்கு கொண்டு வந்து பார்த்துள்ளார். அப்போது, பார்சல் கட்டப்பட்டு இருந்த காகிதத்தில் பாம்பு தோல் இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பரோட்டா பார்சலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும், உணவக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி பாதுகாப்பு அம்சம் குறைவாக உள்ளது என ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.