#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்ஜாயி எஞ்சாமி.. கொரோனா விழிப்புணர்வு வெர்ஷன்! வேற லெவலில் இணையத்தை தெறிக்கவிட்ட போலீசார்கள்!!
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி, நாளுக்கு நாள் அதிகரித்து பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இடையில் கொரோனா பரவல் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது.
இதனால் இந்தியாவில் நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் துயரமும் ஏற்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளா போலீஸ் சமூகவலைதளங்களில் செம ட்ரெண்டாகும் என்ஜாயி என்சாமி பாடலின் வரிகளை கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மாற்றி பாடி அதற்கு நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.