மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீன் குழம்பு சாப்பிட்ட குடும்பமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.. நெளிந்த புழுக்கள்.. பகீர் தகவல்.!
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் வசித்து வருபவர் பிஜு. இவர் கல்லறை பகுதியில் ரூ.200 பணம் கொடுத்து குதிரை கானாங்கெளுத்தி மீனை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
இதனை குடும்பத்தினர் சமைத்து சாப்பிட்ட நிலையில், திடீரென அனைவர்க்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பிஜூவின் மகள் வயிற்று வலியால் முதலில் துடிக்க, அதனைத்தொடர்ந்து அவரின் மனைவிக்கும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முயற்சியின் போதே பிஜூவின் 2-வது மகளும் உடல்நலக்குறைவால் அவதிப்பட, பிஜுவுக்கும் இறுதியில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அனைவரும் அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளனர். இவர்கள் மீன் வாங்கியதாக குறிப்பிட்ட இடத்தில் சுகாதாரமற்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
அதே இடத்தில் மீன் வாங்கி சென்ற மற்றொருவரின் மீனில் புழுக்கள் நெளிந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.