"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
வரன்தேடும் இளைஞர்களை குறிவைத்து, போலித்திருமணம் நடத்தி மோசடி செய்த கேரள கும்பல்..!
திருமணத்திற்கு வரன் தேடி வந்த சேலம் வாலிபருக்கு போலி திருமணம் செய்துவைத்த கேரள கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரை சார்ந்தவர் சுனில் (வயது 42). பாலக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் சபிதா (வயது 24), தேவி (வயது 26), கார்த்திகேயன் (வயது 31). இவர்கள் நால்வரும் சேர்ந்து கடந்த மாதம் தமிழ் நாளிதழில் மணமகன் தேவை என்று விளம்பரம் செய்துள்ளனர்.
இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட செல்போன் நம்பருக்கு, சேலத்தை சார்ந்த மணிகண்டன் என்பவர் தொடர்புகொண்டு பெண் வரன் தொடர்பாக கேட்டுள்ளார். மறுமுனையில் பேசியவர்கள், பாலக்காடு அருகேயுள்ள கொழிஞ்சாம்பாறை வந்து பெண்ணை பார்த்துசெல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மணிகண்டன் தனது நண்பர்களுடன் பெண்ணை பார்த்துவிட்டு, திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கேரளாவை சார்ந்த 4 பேரும், கொழிஞ்சாம்பாறையில் 12 ஆம் தேதி திருமணம் நடத்தலாம் என தெரிவித்துள்ளனர். மணிகண்டனும் சேலத்தில் இருந்து நண்பர்களுடன் சென்ற நிலையில், கோவிலில் வைத்து சபிதா - மணிகண்டன் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு பின்னர் மணப்பெண்ணை சேலத்திற்கு அழைத்து செல்வதாக மணிகண்டன் கூறவே, பெண்ணின் தரப்பில் இருந்து கார்த்திகேயன் மற்றும் இரண்டு பேர் பெண்ணுடன் வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். சேலத்திற்கு சென்ற கார்த்திகேயன், பெண் பார்த்து திருமணம் செய்து வைத்த கமிஷன் தொகை ரூ.ஒன்றரை இலட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அன்றைய நாளின் இரவே ரூ.ஒன்றரை இலட்சம் கார்திகேயனிடம் கொடுக்கப்பட்ட நிலையில், மறுநாள் காலையில் சவீதாவின் தாயார் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர் மகளை பார்க்க விரும்புகிறார் என்று கார்த்திகேயன் பதறியபடி கூறியுள்ளார். இதனைக்கேட்டு இறக்கப்பட்ட மணிகண்டனும், சென்று வாருங்கள் என்று கூறி மனைவியை கார்த்திகேயனுடன் அனுப்பி வைத்துள்ளார்.
கேரளாவுக்கு சென்றவர்கள் மீண்டும் மணிகண்டனை தொடர்பு கொள்ளாத நிலையில், அவர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. 4 நாட்காளாக எவ்வித பதிலும் இல்லாத காரணத்தால், கொழிஞ்சாம்பாறை சென்ற மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மனைவி மற்றும் அவருடன் வந்தவர்களின் அலைபேசி எண்ணை பெற்று சபிதாவின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். அங்கு சபிதா உட்பட 2 பெண்கள் மற்றும் 2 வாலிபர்கள் இருந்த நிலையில், அவர்களை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.