மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர்மார்கெட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; இளைஞருக்கு தர்ம அடி.!
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியைச் சார்ந்த பெண்மணி, தனது நண்பர்களுடன் அங்குள்ள கடை ஒன்றுக்கு சென்று பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.
இளம்பெண் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பெண்ணின் உடல் பாகங்களை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீற முயன்றுள்ளார்.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த பெண்மணி தனது நண்பர்களின் உதவியுடன் அவரைப் பிடித்து செருப்பால் தாக்கி அடித்து நொறுக்கினார்.
பின் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இளைஞரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.