திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கடத்தல், சிறுநீர் அபிஷேகம், மொட்டையடித்து வீடியோ பதிவு; கள்ளக்காதலுக்காக கொடூரம்: பரபரப்பு வீடியோ..!
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரியில் வசிக்கும் பெண்ணிற்கு, அதே பகுதியில் வசிக்கும் அப்பாராவ் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. மனைவியின் கள்ளக்காதலை தெரிந்து கொண்ட கணவர், ஆத்திரத்தில் மனைவியின் கள்ளக் காதலனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் RIP என்று குறிப்பிட்டு பதிவு செய்தார்.
இதை பார்த்த கள்ளக்காதலன் பெங்களூரில் வேலை செய்த கள்ள காதலியின் கணவனை தனது நண்பருடன் சேர்ந்து கடத்தி சந்திரகிரிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவரை கொண்டு சென்றனர். இரண்டு பேரும் சேர்ந்து அவரின் தலையில் சிறுநீர் கழித்து மொட்டை அடித்துள்ளனர். அதன் பின்னர் அவரை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இதை தொடர்ந்து கள்ள காதலியின் கணவனை, இனி உங்கள் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்று மிரட்டி பேச வைத்து, வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, காவல்துறையினர் அப்பாராவ் மற்றும் அவருடைய நண்பர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் அவர்கள் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த கணவன் தற்போது திருப்பதியில் இருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.