மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆற்றுக்குள் காரை பாயவிட்ட கூகுள் மேப்: 2 மருத்துவர்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி.!
கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த 5 இளைஞர்கள் கொச்சிக்கு சென்றுள்ளனர். பின்னர், மீண்டும் இரவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர்.
அச்சமயம் பலத்த மழைபெய்த நிலையில், மழைக்கு நடுவே வாகனத்தை இயக்கி வந்துள்ளனர். கூகுள் மேப்பை பயன்படுத்தி இவர்கள் வந்துகொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, கொடுங்காடு பகுதியில் வழிதவறி ஆற்றுக்குள் காரை இறக்கிவிடவே நீருக்குள் மூழ்கி இருக்கிறது. இதனால் முன்பக்கம் இருந்த 2 இளைஞர்கள் வெளியேற இயலாமல் தவித்து நீருக்குள் மூழ்கியுள்ளனர்.
பிற 3 இளைஞர்களும் பின்பக்கம் கதவை திறந்து வெளியேறி, காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இருவரின் உடலையும் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் காருடன் மீட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், உயிரிழந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்து வரும் மருத்துவர்களான அத்வைத் மற்றும் அஜ்மல் என்பது தெரியவந்தது. விபத்து நள்ளிரவு 1 மணியளவில் நடந்துள்ளது.