திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு பேருந்து - தனியார் பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 15 பேர் படுகாயம்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், எலுவப்பள்ளி பகுதியில் ஓசூரை நோக்கி அரசு பேருந்து 20 பயணிகளுடன் பயணித்துக்கொண்டு இருந்தது.
எதிர்திசையில் ஓசூரில் இருந்து பாகலூர் நோக்கி, தனியார் பள்ளி பேருந்து வந்தது. இந்த இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கின.
அரசு பேருந்தின் டயர் வெடித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதியும் நொறுங்கிப்போயின.
📌 Hosur - Bagalur Road.
— Dharmapuri Theatres (@dpicinemas) December 6, 2023
ACCIDENT!!
School bus and govt bus.. pic.twitter.com/CPS9W7igPm
விபத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர், அரசுப்பேருந்து நடத்துனர், 2 பயணிகள், பள்ளி வாகனத்தில் பயணித்த மாணவர்கள் என 15 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பாகலூர் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்தோர் ஓசூர் பகுதியில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.