மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டபோது எல்.முருகன் எந்த மொழியில் பேசினார் தெரியுமா.?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் புது முகங்களுக்கு இந்தமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு மத்திய அமைச்சரவையில் எந்தவிதமான மாற்றமோ அல்லது விரிவாக்கமோ நடக்கவில்லை.
இந்தநிலையில், தற்போதைய அமைச்சரவையில் காலி இடங்கள் அதிகம் உள்ளதால், குடியரசு தலைவர் மாளிகையில் புதிய மத்திய அமைச்சரவை பதவி ஏற்கும் விழா தொடங்கியுள்ளது. இந்த புதிய அமைச்சரவையில் 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் புதுமுகமாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் இடம் பெற்றுள்ளார்.
தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக பதவியேற்றார் எல் முருகன். அவர் மத்திய அமைச்சராக பதவி ஏற்கும் போது, ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.