குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
திடீர் நிலச்சரிவு! 12க்கும் மேற்பட்டோர் மாயம்!!
கடந்த சில வாரங்களாகவே உத்தரகாண்ட் மாநிலத்தில் பல பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ருத்ரபிரியாக் என்னும் பகுதியில் நேற்று விடாது கன மழை பெய்து வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட காரணமாக மூன்று கடைகள் பலத்த சேதம் அடைந்துள்ளது.
மேலும் கடைக்குள் யாரேனும் சிக்கி உள்ளனர்களா? என்று சந்தேகம் எழுந்ததன் பெயரில் 12க்கும் மேற்பட்டவரை காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பின்பு சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட வீரர்கள் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் காணாமல் போனவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்களா? அல்லது இடைப்பாடுகளுக்கு இடையே சிக்கி உள்ளார்களா? என்று தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.