கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை..! சாமர்த்தியமாக மீட்கும் மீட்பு குழுவினர்..! வைரல் வீடியோ.!



Leopard rescued from well using genius method video goes viral

கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை ஒன்றை மிகவும் வித்தியாசமான முறையில் வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ள சம்பவம் தற்போது இனையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் பதிவிட்டுல ஒருநிமிட வீடியோவில், கிணற்றுக்குள் தவறிவிழுந்த சிறுத்தை ஒன்றை, வனத்துறை அதிகாரிகள் கட்டில் ஒன்றை இரண்டு பக்கமும் ஏணி போன்ற அமைப்பால் கட்டி, அதை கிணற்றுக்குள் இறங்குகின்றனர்.

கட்டில் மீது சிறுத்தை ஏறியதும் அதனை இரண்டு பக்கத்திலும் இருந்து மேலே தூக்க, இறுதியில் சிறுத்தை கிணற்றில் இருந்து வெளியே வருகிறது. மத்தியபிரதேச மாநிலம் சிவபுரி என்னும் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுபோன்று தவறி விழும் மிருகங்களை மீட்கும் போது, மீட்பு பணியில் ஈடுபடுபவர்களையே மிருகங்கள் தாக்க வாய்ப்பு உள்ளதால், இதுபோன்ற பாதுகாப்பான முறையில் மீட்டதாக வனத்துறை அதிகாரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.