ஆசைக்காக ஒதுங்கிய சிங்கங்கள்.. வழியில் சென்ற அப்பாவி விவசாயக் கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்..!
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாய்தேஷ் பையா என்ற விவசாய கூலி தொழிலாளி தனது குடும்பத்துடன் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் கம்பா தாலுகாவைச் சேர்ந்த நானி தாரி என்ற கிராமத்தில் தங்கி ஒரு பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு தனது குடும்பத்தினருடன் பாய்தேஷ் பையா வீடு திரும்பியுள்ளார். வரும் வழியில் எதிர்பாராத விதமாக ஒரு ஆண் சிங்கம் ஆனது பின் புறத்திலிருந்து அவர்மேல் பாய்ந்துள்ளது. மேலும் மற்றொரு பெண் சிங்கம் ஆனது அவரை அருகில் இருந்த மாந்தோப்பிற்குள் இழுத்துச்சென்று விட்டது.
இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் பயத்தில் அலறினர். அவர்களின் அழுகுரலைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்தை நோக்கி ஓடி வந்துள்ளனர். மேலும் வனத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பாய்தேஷ் பையாவின் ஒரு சில பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மற்ற பாகங்களை இரண்டு சிங்கமும் வேட்டையாடி தின்று இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கின்றனர். பின்னர் நடத்திய தொடர் வேட்டையின் மூலம் இரண்டு சிங்கங்களையும் வனத்துறையினர் உயிருடன் பிடித்துள்ளனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அந்தப் பகுதி மக்கள் இதுபோன்ற சம்பவங்கள் இது வரை இந்தப் பகுதியில் நடந்ததில்லை. இதுவே முதல் முறை. ஒருவேளை அந்த இரண்டு இளம் சிங்கங்களும் உடலுறவுக்காக ஒதுங்கியிருந்த சமயத்தில் அவர்கள் அந்த வழியில் குறுக்கிட்டதால் ஆக்ரோஷப்பட்ட சிங்கங்கள் அவரைத் தாக்கி கொன்று இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.