குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
திருமண வரவேற்பு விழா தாம்பூல பையில் சரக்கு பாட்டில்.! அதிரடியாக ஆப்பு வைத்த கலால்துறை.!
பொதுவாக திருமணம், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட உறவினர்களை சந்தோஷப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் தாம்பூலப்பை வழங்குவது வழக்கம். அதில் வெற்றிலை, பாக்கு, தேங்காய்,பழம், பிஸ்கட் போன்றவை போடப்பட்டிருக்கும். அவ்வாறு புதுச்சேரியில் வரவேற்பு விழாவில் கொடுக்கப்பட்ட வினோத தாம்பூலப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் நகரப் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் அண்மையில் திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. இதில் மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கு தாம்பூல பை வழங்கப்பட்டுள்ளது.
அந்த பையில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் மது பாட்டிலையும் சேர்த்து கொடுத்துள்ளனர். இதனை சில விருந்தாளிகள் மகிழ்ச்சியுடன் ஒன்றுக்கு இரண்டாக வாங்கி சென்றனர். சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டிலை வாங்காமல் சென்றுள்ளனர். தாம்பூல பையில் மதுபாட்டில் கொடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி சச்சையானது. இந்நிலையில் தாம்பூல பையில் மதுபானம் சேர்த்து வழங்கிய நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கலால்துறை உத்தரவிட்டுள்ளது.