மதுப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்: ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் 10 நிமிடத்தில் உங்கள் வீடு தேடி வரும்..!



liquor-will-be-delivered-to-your-doorstep-within-10-min-39PL6N

ஆன்லைனில் ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் வீட்டுக்கே மது விநியோகிக்கும் வசதி கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் வீட்டுக்கே மது விநியோகிக்கும் வசதி மது பிரியர்களின் வசதிக்காக கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளரின் வீடுகளுக்கே சென்று மது வினியோகிக்கும் சேவையை பல்வேறு நாடுகளில் உள்ள தனியார்  நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த வசதி இது வரையில் இந்தியாவில் நடை முறையில் இல்லை.

பல்வேறு பொருட்களை வாடிக்கையாளரின் வீடுகளுக்கு சென்று வினியோகிக்கும் சேவைகளை ஃபிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. வாடிக்கையாளர் விரும்பும் உணவு வகைகளை வினியோகிக்கும் பணியை ஸோமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

நாட்டிலேயே முதல் முறையாக ஆர்டர் செய்த 10 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளரின் வீட்டுக்கே மது வினியோகிக்கும் வசதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

liquor

ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘பூஸி’ இந்த சேவையை தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..

வாடிக்கையாளரின் வீட்டுக்கு அருகில் உள்ள மதுக்கடையிலேயே வாடிக்கையாளர் விரும்பும் மது வகையை  பெற்று, ஆர்டர் செய்த 10 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளரிடம் சேர்க்கும் வகையில் இந்த நிறுவனத்தின் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காள கலால் துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இது மதுப்பிரியர்களின் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெறும் என ‘பூஸி’ நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.