திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சுவாரஸ்ய காதல் திருமணம்.. நெதர்லாந்து பெண்ணை கரம்பிடித்த உ.பி இளைஞர்..!
உத்தரபிரதேசம் மாநிலம் பதேபூர் பகுதியைச் சேர்ந்த ஹர்த்திக் வர்மா நெதர்லாந்து நாட்டில் ஒரு மருந்து நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த நிறுவனத்தில் நெதர்லாந்தை சேர்ந்த கெப்ரில்லா என்ற இளம்ப்பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் ஹர்த்திக் வர்மா மற்றும் கெப்ரில்லா நட்பாக பழகி வந்துள்ளனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து நெதர்லாந்தில் இவர்கள் லிவிங் டுகேதர் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து ஹர்த்திக் வர்மா மற்றும் கெப்ரில்லா திருமணம் செய்ய முடிவு செய்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனது காதலியுடன் இந்தியா வந்த ஹர்த்திக் வர்மாவை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இதனையடுத்து ஹர்த்திக் வர்மா மற்றும் கெப்ரில்லாவிற்கு கோலாகலமாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் இந்த புதுமண தம்பதியினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.