மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பகீர் மரணம்... மாரடைப்பிற்கு 10 வயது சிறுவன் பலி... அதிர்ச்சி தகவல்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த பத்து வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேசம் மாநிலத்தின் உம்ரி கிராமத்தில் வசித்து வந்த சாஹிர் என்ற 10 வயது சிறுவனுக்கு கடந்த 21 ஆம் தேதி இரவு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுவனை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக குவாலியர் நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால் குவாலியர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான். மருத்துவமனைக்கு சென்ற பின் அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் சிறுவனின் இறப்பிற்கு மாரடைப்புதான் காரணம் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டங்களில் மாரடைப்பு என்பது அனைவரையும் தாக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய அபாயமாக இருக்கிறது. சமீபத்தில் கூட கேரளாவைச் சார்ந்த குழந்தை ஒன்று மாரடைப்பில் பலியானது குறிப்பிடத்தக்கது.