#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆணவக் கொலை... காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி... முதலைக்கு இரையாக்கிய பெற்றோர்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியின் அரசு கொலை செய்யப்பட்டு கல்லை கட்டி ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பெண்ணின் பெற்றோரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் மெரோனா மாவட்டத்தை சேர்ந்தவர் ராதேஷ்யாம் தோமர் (21). இவர் கடந்த ஜூன் மூன்றாம் தேதியிலிருந்து காணாமல் போய் இருக்கிறார். இது தொடர்பாக அவரது பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் தங்களது மகனை ஜூன் 3ஆம் தேதியிலிருந்து காணவில்லை என்றும் அவர் ஷிவானி தோமர் (18) என்ற பெண்ணை காதலித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகனை கொலை செய்திருக்க கூடும் என அஞ்சுவதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் அந்த பெண்ணின் பெற்றோரிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. ராதேஷ்யாம் தோமர் மற்றும் சிவானி தோமர் இருவரது காதலுக்கும் பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊரை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து இருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த சிவானியின் பெற்றோர் இருவரையும் அழைத்து வந்து சுட்டுக் கொன்றதாகவும் அவர்களது உடலை கல்லில் கட்டி முதலைகள் அதிகம் இருக்கும் சம்பல் ஆற்றில் இறக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மீட்பு குழுவின் உதவியுடன் அவர்களது உடலை தேடும் பணி ஆற்றில் நடைபெற்று வருகிறது. இந்த கொலை ஆணவக் கொலையாக இருக்கும் என்று ரீதியிலும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். பெண்ணின் பெற்றோர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை.