மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரவு உணவு சாப்பிட்ட 100 மாணவ - மாணவிகள் உடலநலக்குறைவால் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியரில் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நேற்று இரவு உணவு சாப்பிட்ட மாணவ-மாணவியர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தியை அறிந்த மருத்துவமனை நிர்வாகம், விரைந்து செயல்பட்டு படுகைகளை தயார் செய்து சிகிச்சை அளித்துள்ளது.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம், உணவு மற்றும் உணவுப்பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
100 மாணவர்கள் மொத்தமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில், அவர்களின் நிலை தற்போது சீராக இருக்கிறது.
4 மாணவர்களில் 3 பேர் காலை 10 மணிக்கு அபாயகட்டத்தில் இருந்து விலகி உயிர்பிழைத்தனர். ஒருவர் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கிறார். அவரின் உடல்நலமும் முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
#WATCH | Over 100 children fall ill due to food poisoning at Lakshmibai National Institute of Physical Education in Gwalior, Madhya Pradesh. pic.twitter.com/NOgYiNkBD3
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 4, 2023