மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
11 வயது சிறுமி 65 வயது கயவனால் பலாத்காரம்.. வீட்டை இடித்து தள்ளிய அதிகாரிகள்.. காரணம் என்ன?..!
சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், 65 வயது காமுகனின் வீடு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளது என இடித்து அகற்றப்பட்டது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் மாவட்டம், பஹோதாபூர் சுபாஷ் நகரை சேர்ந்தவன் சதுர்புஜ் ரத்தோர் (வயது 65). இவனின் வீட்டருகே 11 வயது சிறுமி வசித்து வரும் நிலையில், சம்பவத்தன்று சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக தனது இல்லத்திற்கு அழைத்து சென்றவன், அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
மேலும், இதனை வெளியே கூறினால் குடும்பத்துடன் கொலை செய்திடுவேன் என்று மிரட்டவே, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தனக்கு வயிறு வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சதுர்புஜ் ராத்தோரின் கொடூர செயல் அம்பலமானது. இதனையடுத்து, அவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும், அவனின் வீடு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதையும் மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது.
இதனையடுத்து, காவல் துறையினரின் பாதுகாப்புடன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் சிக்கியவனின் வீடு இடித்து புல்டோசரால் தரைமட்டமாக்கப்பட்டது. மத்திய பிரதேசம் மாநிலத்தை பொறுத்த வரையில், பாலியல் பலாத்கார குற்றவாளிகள் பலரும் சட்டவிரோதமாக வீடு காட்டுவதும், அவர்கள் புகாரில் சிக்கியதும் அதிகாரிகள் அவர்களை வீட்டினை இடித்து தள்ளுவதும் தொடர்கதையாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதனைப்போன்ற சம்பவங்கள் முந்தைய நாட்களில் உத்திர பிரதேசத்தில் நடந்து குறிப்பிடத்தக்கது.
ग्वालियर शहर के सुभाष नगर बहोड़ापुर रोड निवासी 65 वर्षीय चतुर्भुज ने एक 11 वर्षीय मासूम बालिका के साथ दुष्कृत्य का जघन्य अपराध कर मानव समाज को कलंकित किया था।@CMMadhyaPradesh#JansamparkMP pic.twitter.com/nR3n2WcJeS
— Collector Gwalior (@dmgwalior) March 30, 2022