மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உயரத்தால் கேள்விக்குறியான வேலை.. எம்.எல்.ஏ-வின் நெகிழ்ச்சி செயலால் துள்ளல் மகிழ்ச்சி.! வாழ்க்கைக்கு ஒளியேற்றிய நெகிழ்ச்சி.!!
உயரம் குறைந்த காரணத்தால் பணியிட வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ முயற்சியால் 28 வயது இளைஞரின் வாழ்க்கையில் வளர்ச்சி என்ற தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் நகரில் வசித்து வருபவர் அங்கேஷ் கோஸ்தி (வயது 28). இவர் எம்.பி.ஏ பயின்றுள்ள நிலையில், இவரின் உயரம் குறைவின் காரணமாக பல்வேறு இடங்களில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்த நிலையில், தனது எதிர்காலம் என்னவாகும் என்று எண்ணி சோகத்தில் ஆழ்ந்துள்ளார். இந்த விஷயம் குவாலியர் தெற்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரவீன் பதாக் கவனத்திற்கு செல்ல, அவர் அங்கேஷ் கோஸ்தியின் தகவலை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு 35 முதல் 40 நிறுவனங்கள் வரை 2 மணிநேரத்திற்குள் தொடர்பு கொண்ட நிலையில், அவர் தனக்கு தகுந்த நிறுவனத்தை தேர்வு செய்துகொண்டார். இதனால் அங்கேஷ் மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும், அவரின் குடும்ப சூழலும் வரும் நாட்களில் முன்னேற்றமடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
अंकेश का इंटरव्यू सॉर्टेड स्क्वायर कोवर्किंग में हुआ आकाश अरोरा जी और उनकी टीम ने साक्षात्कार लिया । मुझे ख़ुशी है की अंकेश का चयन इस बेहतर कम्पनी में हो गया है । ईश्वर से उनके उज्जवल भविष्य की कामना करता हूँ ॥#नेता_नहीं_दक्षिण_का_बेटा_ @INCMP @INCIndia pic.twitter.com/IbNsBECr2H
— Praveen Pathak (@PRAVEENPATHAK13) April 13, 2022