மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அழகாக இருந்தால் வரதட்சணையை தள்ளுபடி; மணமகனின் தந்தை பகீர் பேச்சு.. காவல் நிலைய கதவைத்தட்டிய இளம்பெண்.!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரைச் சார்ந்த 27 வயது ஆசிரியை, போபால் காவல்துறை ஆணையர் ஹரி நாராயணன் மிஸ்ராவிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், பத்துக்கும் மேற்பட்ட ஆண்களால் வரதட்சணை காரணமாக நான் நிராகரிக்கப்பட்டு எனது திருமணம் நின்று போனது.
எனது சொந்த அனுபவத்தை வைத்து என் மனுவை நான் வழங்கி இருக்கிறேன். தந்தை கடந்த பிப்ரவரி மாதம் பெண் பார்க்க ஒரு இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இளைஞர்களின் தந்தை வரதட்சணை குறித்து கேட்டபோது, ரூபாய் 50 லட்சம் முதல் 60 லட்சம் வரை எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். உங்களது மகள் அழகாக இருந்திருந்தால் உங்களுக்கு தள்ளுபடி செய்து தருவோம் என்றும் கேலியாக பேசி இருக்கிறார்.
இவ்வாறான குற்றத்தை தடுப்பதற்கு காவல்துறையினர் திருமணம் நடைபெறும் இடங்களில் திடீர் சோதனை நடத்த வேண்டும். வரதட்சனை கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் மீண்டும் அதனை செய்தால் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.