திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குற்றவாளிகளை பிடிக்கச்சென்ற தலைமை காவலர் நெஞ்சில் குண்டு வாங்கி வீர மரணம்; 3 பேர் கைது.. ம.பி-யில் அதிர்ச்சி.!
![Madhya Pradesh Seoni Cop Killed by Shot Dead](https://cdn.tamilspark.com/large/large_cp-shot-dead-70199.png)
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சீயோனி மாவட்டத்தில், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் எஸ்யுவி காரில் தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து, தகவல் அறிந்த காவல் அதிகாரிகள் குழு, அவர்களை மற்றொரு காரில் விரட்டிச்சென்றுள்ளது.
ஒருவழியாக காரை மடக்கிய அதிகாரிகள், அதில் இருந்தவர்களை கைது செய்ய முற்பட்டனர். அப்போது, குற்றவாளிகள் நடத்திய துப்பாக்கிசூடில் தலைமை காவலர் ராகேஷ் தாகூர் மார்பில் குண்டு படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை மீட்ட அதிகாரிகள், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இருக்கும் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்க, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரதியுமன் வைஷ்ணவ் (வயது 24), குல்ஷன் தாஸ் வைஷ்ணவ் (வயது 34), ஜனக் சிங் கன்னா (வயது 46), சதாம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் சதாம் தவிர்த்து பிற மூவரும் கைது செய்யப்பட்டனர்.