மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாலையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு விஷமாக மாறியதால் பயங்கரம்; 100 மாணவர்கள் உடல்நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதி.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டம், ராம்பூர் சப்பார் பகுதியில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று மாலை நிர்வாகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாலை நேர உணவை சாப்பிட்ட 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலக்குறைவை எதிர்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் உடலநலக்குறைவுக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடக்கிறது.