மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு பேருந்தில் திடீரென பற்றிய தீ.. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய பயணிகள்.!
சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென தீப்பற்றிய நிலையில், ஓட்டுனரின் சமயோஜித புத்தியால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மோர்பவனியில் இருந்து கபர்கெடா பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று 25 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ரிசர்வ் வங்கி சதுக்கம் அருகாமையில் சென்ற போது, திடீரென என்ஜின் பகுதியிலிருந்து புகைவந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து ஓட்டுநர் உடனடியாக எச்சரிக்கை விடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறிய நிலையில், அனைவரும் இறங்கியவுடன் உடனடியாக பேருந்து முழுக்க மளமளவென தீ பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது.
பின் இது குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், ஓட்டுனரின் சமயோஜித புத்தியால் பேருந்தில் இருந்த 25 பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.