மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எந்த நேரமும் செல்போனில் கேம்.. பெற்றோர் கண்டித்ததால் 14 வயது சிறுவன் தற்கொலை.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, போய்வாடா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் பப்ஜி, ப்ரீ பயர் போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்துள்ளார்.
எந்த நேரமும் செல்போனும் கையுமாக சிறுவன் இருந்து வந்த நிலையில், இதனைகவனித்த பெற்றோர்கள் பலமுறை கண்டித்தும் பலனில்லை. இறுதியாக, கடந்த பிப். 13 ஆம் தேதி சிறுவனை கண்டித்த பெற்றோர், மகனிடம் இருந்து ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளனர்.
இதனால் மனவிரக்தியில் இருந்த சிறுவன், நள்ளிரவில் வீட்டில் தூங்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலையில் இதுகுறித்து பெற்றோர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளையில், பெற்றோர்கள் கேம் விளையாடியதை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்துகொண்டது உறுதியானது.