மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் சோகம்.. 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலி.!
பொதுக்கழிப்பிட கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 பேர் மூச்சுத்திணறி பலியான சோகம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, மேற்கு காந்திவிலி பகுதியில் ஏக்தா நகர் உள்ளது. இந்த நகரில் மும்பை மாநகராட்சி சார்பில் பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பணியாளர்கள் சென்ற நிலையில், அவர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது ஒருவர் காலிஇடறி கழிவுநீர் தொட்டியில் விழுந்துள்ளார்.
அவருடன் இருந்த 2 பேர் கழிவுநீர்த்தொட்டியில் விழுந்தவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, அவர்களும் கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளனர். அப்போது, மூன்று பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மூவரையும் மீட்டு சதாப்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் 3 பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.